மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரறுக்கும் முயற்சியில் மத்திய அரசுடன் மாணவர்கள் கைகோர்க்க வேண்டும் என்று ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் ஹுப்ளிக்கு வந்தார்.
அங்கு நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல், நாட்டை கட்டமைக்கும் பணியில் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த இளைஞர்கள் துடிப்புடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தருவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
0
comments:
on "பயங்கரவாதத்தை வேரறுக்கும் முயற்சியில் இறங்க மாணவர்களுக்கு ராகுல் அழைப்பு"
0 comments: on "பயங்கரவாதத்தை வேரறுக்கும் முயற்சியில் இறங்க மாணவர்களுக்கு ராகுல் அழைப்பு"
Post a Comment