மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
மேற்குவங்க மாநிலத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்தெறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர்.
பள்ளிசீருடைக்கு மாற்றமாக இம்மாணவிகள் அணிந்து வந்த காரணத்தினால் இதைப்பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரமடைந்து அந்த 3 பேரையும் கண்டித்து வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.
அதில் ஒரு மாணவி ஆசிரியையிடம் தான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வராத காரணத்தினால் லெக்கிங்ஸ் அணிந்து வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால் மேலும் கொதித்துப்போன பிபாஷா தாக்கூர், இருபாலர் அமர்ந்திருக்கும் வகுப்பில் அனைவருக்கும் முன்பு அந்த மாணவியின் லெக்கிங்ஸை பிடித்து கிழித்து அவரை அரை நிர்வாணமாக்கினார். அம்மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்பு லெக்கிங்சை கேட்டுள்ளார். இருப்பினும் பிபாஷா தர மறுத்ததால் அம்மாணவி அரை நிர்வாணத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த இருதினங்களுக்கு முன்பு(27ம் திகதி) நடந்துள்ளது. மாணவியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து மறுநாள்(28ம் திகதி) போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் பிபாஷா தாக்கூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அம்மாணவி கூறுகையில், நான் இரு நாட்களாக பள்ளிக்கு வராததால் சீருடை விதிமுறைகள் எனக்கு தெரியாது என்று ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கோபப்பட்டு அனைவரின் முன்பும் எனது லெக்கிங்ஸை கிழித்தார். அவமானத்தில் நான் கதறி அழுதுவிட்டேன். அவர் எங்கள் 3 பேரையும் வகுப்பை விட்டு வெளியேற்றினார்.
பள்ளி முடிந்த பிறகு லெக்கிங்ஸை கொடுங்கள் வீட்டு இப்படியே செல்ல முடியாது என்று கெஞ்சினேன். ஆனால் அவர் கொடுக்காததால் அரை நிர்வாணக் கோலத்திலேயே வீட்டுக்கு சென்றேன் என்றார்.
0
comments:
on "மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்"
0 comments: on "மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்"
Post a Comment