உலகிலேயே மிக மோசமான ஓய்வூதிய திட்டம் பிரிட்டனில் தான் நடைமுறையில் உள்ளது என்று OECD என்ற பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பாதிப்பு அடைந்தனர். மேலும் முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் இழப்பைத் தான் சந்தித்து உள்ளன.
மற்ற வளர்ந்த நாடுகளான சிலி, போர்ச்சுக்கல், கொரியாவில் வயதானவர்கள் ஓய்வூதியப் பலனை நல்ல முறையில் அனுபவிக்கின்றனர். ஸ்பெயின், அமெரிக்காவிலும் கூட ஓய்வூதிய திட்டம் சிறப்பாக இல்லை. இங்கும் ஆண்டு ஒன்றுக்கு 1-2 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதியின் தேசியக் கழகத்தின் கொள்கை இயக்குநரான டேரன் பிலிப் கூறுகையில், உலகப் பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனின் ஓய்வூதிய முதலீடும் இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
எனவே ஓய்வூதிய வயதை அதிகரித்து எளிமையான திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என ஓய்வூதியத் துறையின் அமைச்சர் ஸ்டீவ் வெப் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் சிலி நாட்டில் 5 சதவீதம், போலந்தில் 4 சதவீதம், ஜேர்மனியில் 3 சதவீதம் என ஓய்வூதிய நிதி வளர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.





0 comments: on "உலகின் மிக மோசமான ஓய்வூதிய திட்டத்தை கடைபிடிக்கும் பிரிட்டன்"
Post a Comment