தலைப்புச் செய்தி

Tuesday, June 26, 2012

பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தினால் லண்டன் கல்லூரியில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல்(வயது 40). இவர் ஒரு தொழிலதிபர், இவரது மனைவி மரூன் ரபிக்(வயது 40).
இவர்களுக்கு அவைஸ்(வயது 18), மற்றும் இப்ராகிம்(வயது 12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதே பகுதியில் உள்ள கல்லூரியில் அவைஸ் படிக்கிறான்.
இந்த கல்லூரியில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டதால் மரூன் ரபிக், பர்தா அணிந்து வந்தார்.
இவரை தடுத்த கல்லூரி காவலர்கள் பர்தாவை அகற்றினால் தான் கல்லூரிக்குள் அனுமதிப்போம்,என்றனர்.
கடைசி வரை மரூன் ரபிக் பர்தாவை அகற்ற மறுத்ததால் அவர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து மரூன் ரபீக், பிரிட்டனில் பிறந்து வளர்ந்த நான், கல்லூரிக்கு அடிக்கடி வருகிறேன். இருப்பினும் என்னை பர்தாவை அகற்றச் சொல்லி வருத்தமடைய செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு"

Post a Comment