பிரான்சில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிராங்கோய்ஸ் ஹோலண்டே வெற்றி பெற்று கடந்த மாதம் பதவி ஏற்றார்.
அதன் பின் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜனாதிபதி ஹோலண்டேயின் செயல்பாடுகளை முன்வைத்து, ஜுன் 14ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இணையத்தளம் மக்களிடையே கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.
இதில் ஜனாதிபதியின் செல்வாக்கு 2 சதவிகிதம் சரிந்திருப்பது தெரியவந்தது. அதாவது 61 சதவிகிதத்தில் இருந்து 59 சதவிகிதமாக குறைந்தது.
ஆனால் பிரதமர் ஜீயன்மார்க் செல்வாக்கு 65 சதவிகிதத்தில் அப்படியே தொடர்ந்து நீடிக்கிறது.
0 comments: on "பதவியேற்று ஒரே மாதத்தில் மக்களின் செல்வாக்கை இழந்த புதிய ஜனாதிபதி"
Post a Comment