நாட்டில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி பிராணப்பை முன்னிறுத்தினாலும் அதன் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பிரணாப்பை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை,
ஆனால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அல்லது பிரதமர் மன்மோகன் சிங்கை பரிந்துரைத்தது புது வழியை வகுக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் பெயரை அறிவிப்பதற்கு முன்னர் அவரிடம், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவும், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயமும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை கலாம் அலுவலகம் உறுதி செய்யவில்லை. ஆனால் சமாஜ்வாடி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், கலாம் பெயரை அறிவிப்பதற்கு முன்னர் அவரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தன. |
0 comments: on "ஜனாதிபதி தேர்தல்: அப்துல்கலாமுக்கு மீண்டும் ஆதரவு"
Post a Comment