பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் பாதுகாப்பிற்காக 10 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக வருடத்திற்கு 7 லட்சம் யூரோக்களுக்கு மேலாக செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்கோசியின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு 10 அதிகாரிகள் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளனர், இதில் இருவர் ஓட்டுநர்களாக செயல்படுவர். மேலும் சர்கோசி மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பர்.
இதுகுறித்து நிக்கோலஸ் சர்கோசியின் அலுவலகம் கூறுகையில், சர்கோசி இந்த செலவீனத்தை நிர்ணயிக்கவில்லை. பிரான்சில் முக்கியமானவர்களுக்கு பாதுகாப்பு சேவை அளிக்கும் SPHP-யே(Service de protection des hautes personnalités) இதனை முடிவு செய்தது என்று தெரிவித்துள்ளது.
மேலும் SPHP கூறுகையில், முக்கியமான நபர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தின் அடிப்படையில் இத்தகைய பாதுகாப்பு வழங்கப்படும்.
பிரான்சில் மட்டும் கிட்டத்தட்ட 10 நபர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.





0 comments: on "முன்னாள் ஜனாதிபதி சர்கோசியின் பாதுகாப்பிற்காக 10 அதிகாரிகள் நியமனம்"
Post a Comment