ஐ.நா:சிரியாவின் ஹும்ஸ் மாகாணத்தில் ஹவ்லா கிராமத்தில் 32 குழந்தைகள் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்களை கூட்டுப் படுகொலைச் செய்த சிரியா ராணுவத்தின் மிருகத்தனமான நடவடிக்கை மனித குலத்திற்கு எதிரான குற்றமாக கருதவேண்டும் என ஐ.ந மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
தாங்கள் கேள்வி கேட்கப்பட மாட்டோம் என்ற ஆட்சியாளர்களின் துணிச்சலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என்று ஐ.நா மனித உரிமை கமிஷனர் நவி பிள்ளை தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை கமிஷனின் அவசரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
சிரியாவின் நிலைமைகள் குறித்து விவாதிக்க ஐ.நா மனித உரிமை கமிஷன் நேற்று அவசரமாக கூடியது. சிரியாவில் நடைபெறும் வன்முறைகள் குறித்த புகாரை சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானம் குறித்து மனித உரிமை கமிஷன் பரிசீலிக்கும்.
2011-ம் ஆண்டு பஸ்ஸாருல் ஆஸாதின் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய பிறகு நான்காவது தடவையாக இப்பிரச்சனை தொடர்பாக ஐ.நா மனித உரிமை கமிஷன் விவாதிக்கிறது. ஹவ்லா படுகொலைகளை 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனித உரிமை கமிஷன் கடுமையாக கண்டனம் தெரிவிக்கும் என கருதப்படுகிறது.
ஹவ்லா படுகொலைகள் தன்னை அச்சமடையச் செய்துள்ளது என்றும், இதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பது அத்தியாவசியமானது என்றும் மனித உரிமை கமிஷனிடம் நவி பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படுகொலைகளை நடத்த உத்தரவி பிறப்பிக்கின்றவர்களும், அதனை தடுப்பதில் தோல்வியை சந்திப்பவர்களும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிவரும். இத்தகைய கொடூரங்களை தடுக்கவும், குற்றவாளிகளை சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணைச் செய்யவும் இதர நாடுகளுக்கும் பொறுப்புள்ளது என்று நவி பிள்ளை கூறினார்.
சிரியாவில் நடக்கும் குற்றங்கள் குறித்த புகாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மனித உரிமை கமிஷனிடம் தான் தொடர்ந்து வலியுறுத்துவதாக நவி பிள்ளை தெரிவித்தார்.
News@thoothu
News@thoothu





0 comments: on "ஹவ்லா படுகொலை: சிரியாவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கமிஷன்!"
Post a Comment