தலைப்புச் செய்தி

Wednesday, June 13, 2012

தன் மீதான பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க கோரி விக்கிலீக்ஸ் நிறுவனர் மனுத்தாக்கல்


தன் மீதான பாலியல் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச்.
இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக, ஸ்வீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
ஸ்வீடன் கோரிக்கைப்படி இவர் கைது செய்யப்பட்டார், அதன் பின் லண்டன் நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே அசாஞ்சை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது.
இதை எதிர்த்து அசாஞ்ச் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில் ஐந்து நீதிபதிகள் அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் அசாஞ்ச் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற அதிகாரி கூறுகையில், ஸ்வீடன் நாட்டிடம் அசாஞ்சை ஒப்படைப்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம். எனினும் இந்த வழக்கு விசாரணை குறித்த திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தன் மீதான பாலியல் புகாரை மீண்டும் விசாரிக்க கோரி விக்கிலீக்ஸ் நிறுவனர் மனுத்தாக்கல்"

Post a Comment