|
மத்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் மேலும் 300 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் கடந்த 35 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகள் பாதிக்கப்பட்டது. இவர்களிடம் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மறுப்பதால் போராட்டம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மேலும் 300 விமானிகளை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. |





0 comments: on "மேலும் 300 விமானிகளை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா"
Post a Comment