மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு: வர்த்தக ரீதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்த போதிலும் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் இந்திய மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகரிப்பு காரணமாக அவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 லட்சம் பேராகும். பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் டொலருக்கு எதிராக 18 சதவீதமும், கனடா டொலருக்கு எதிராக 17 சதவீதம், இங்கிலாந்தின் பவுண்டுக்கு எதிராக 16 சதவீதமும் அவுஸ்திரேலியா டொலருக்கு எதிராக 13 சதவீத அளவிற்கும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக நடுத்தர இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு ஜனவரி முதல் தற்போதுவரையில் அமெரிக்கா டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருப்பினும் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மோகம் இந்திய மாணவர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு காரணமாக கல்வி செலவு அதிகரித்துள்ளதை தெரிந்து வைத்துள்ள மாணவர்கள் கல்வி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் பல்வேறு பணிகள் செய்து தேவையான பணத்தை ஈடுசெய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.
0
comments:
on "அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய மாணவர்களுக்கு அபாயம்"
0 comments: on "அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய மாணவர்களுக்கு அபாயம்"
Post a Comment