தலைப்புச் செய்தி

Wednesday, June 6, 2012

போபால் விஷவாயு இழப்பீடு: மத்திய அரசு சாதனை


போபால் விஷவாயு சம்பவத்தில் மத்திய அரசு கணிசமான சாதனையை எட்டியுள்ளது என மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு போபாலில் நடந்த விஷயவாயு சம்பவத்தில் பல்லாயிரக்கணக்‌கானோர் பலியாயினர்.


இந்தசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சிலருக்கு இழப்பீடு சரிவர கிடைக்கவில்லை எனவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு ஆலையில் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடிந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ‌வழக்கு தொடரப்பட்டது.


இதுதொடர்பாக கடந்த மே 11-ம் திகதி, போபால் ஆலையில் உள்ள சுமார் 350 தொன் கழிவுகளை அகற்றும் விடயத்தில் மத்திய அமைச்சரவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில் அமைச்சரவைக்குழுவினர் இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் சென்றனர். அங்கு விஷவாயுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசினர்.


போபாலில் மத்திய அமைச்சர்கள் குழு: 


உச்ச நீதிமன்றம் உத்தரவினை அமல்படுத்துவது குறித்தும், ‌போபால் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடந்தது.


இதில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், சல்மான்குர்ஷித், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


போபால் விஷவாயு சம்பவத்தில் மத்திய அரசு கணிசமான சாதனையை எட்டியுள்ளது என மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "போபால் விஷவாயு இழப்பீடு: மத்திய அரசு சாதனை"

Post a Comment