அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கூறியதாவது, தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 5 முதல் 6 விஷயங்கள் தான் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன்.
அவை நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட தேசிய பிரச்னைகளாகவே இருக்கும். இப்போதைய நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், தேர்தல் நடைபெறும்போது நிச்சயமாக ஒபாமாவுக்குதான் அதிக ஆதரவு இருக்கும். எனவே அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்று நம்புகிறேன் என்றார் கிளிண்டன்.
புளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒபாமாவைவிட ரோம்னிக்கு ஆதரவு சற்று கூடுதலாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இருவருக்கும் கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதியாக ஒபாமா மேற்கொண்டுள்ள சாதனைகள் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.





0 comments: on "அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ஒபாமா தான் பதவி ஏற்பார்: பில் கிளிண்டன்"
Post a Comment