அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமாவே(Barack Obama) வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
எதிர்க்கட்சியான, குடியரசுக் கட்சி சார்பில், மிட் ரோம்னிக்கும்(Mitt Romney) போட்டியிடுகின்றார். இந்நிலையில், ஏ.பி.சி. என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் சமீபத்தில் அடுத்த ஜனாதிபதி குறித்து மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமாவை விட, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான மிட் ரோம்னிக்கு மக்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் 64 வயதான மீட் ரோம்னி, ஒபாமாவை வீழ்த்தி அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் ஆளும் ஜனாதிபதியான ஒபாமா கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியதால்தான் ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 26 மாகாணங்களில் மிட் ரோம்னிக்கு ஆதரவாக 49 சதவீகித மக்களும், ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆதரவாக 47 சதவீகித மக்களும் வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





0 comments: on "ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஒபாமா பின்னடைவு"
Post a Comment