தலைப்புச் செய்தி

Tuesday, March 13, 2012

இஸ்ரேலின் தூண்டுதலால்தான் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளார் - பாப்புலர் ஃப்ரண்ட்


புதுடெல்லி:  மூத்த பத்திரிக்கையாளரான செய்யது முஹம்மது காஜ்மி கைதுசெய்யப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலினால் தான் இந்திய அரசு காஜ்மியை கைது செய்துள்ளது என்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

சல நாட்களுக்கு முன்பு டெல்லியில் இஸ்ரேலிய தூதரின் காரில் குண்டுவெடித்தது. இதற்கு ஈரான் தான் காரணம் என எந்த ஆதாரமுமில்லாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டின. இஸ்ரேலிய உளவுத்துறையினர் கொடுத்த செய்தியின் அடிப்படையில் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறுகிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழும் இஸ்ரேலிய உளவு நிருவனமான மொஸாத்தின் உள‌வாளிகளே நேரடியாக இந்தியா வந்து காஜ்மியை விசாரிக்க இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னர் இஸ்ரேலிய தூதரின் கார் குண்டுவெடிப்பில் ஈரானிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வந்த இந்தியா தற்போது தன்னுடைய கருத்தை மாற்றியிருக்கிறது. இதிலிருந்தே இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும், பாதுகாப்புத்துறையிலும் இஸ்ரேலின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை நன்றாக உணரலாம்.

பத்திரிக்கையாளர் காஜ்மி ஈரான் நாட்டு உளவு நிறுவனத்தின் உளவாளி என்று நம்பப்பட்டுவருகிறது. தன்னுடைய எழுத்தின் மூலமாக இஸ்ரேலை விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக இக்குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இக்கைது சம்பவத்தின் மூலம் இஸ்ரேல் தனக்கு எதிராக செயல்படும் பத்திரிக்கைகளையும், நிருபர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பலஸ்தீனத்தில் அத்துமீறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் செயல்களை பல பத்திரிக்கைகளுக்கும் இவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இதே போன்று இஸ்ரேலுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது தேசிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஒரே காரணத்திற்காக இதே குண்டு வெடிப்பு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்டை இணைக்க உளவுத்துறையினரும், ஊடகங்களும் முயற்ச்சி செய்து வருகின்றது. நமது உள்நாட்டு விவகாரங்களிலும், வெளியுறவுக்கொள்கைகளிலும் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நம் நாட்டின் இறையான்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்ககூடியது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

காஜ்மியை கைது செய்தது ஒட்டுமொத்த பத்திரிக்கை சுதந்திரத்தை பரிப்பதாகும். காஜ்மியை கைதுசெய்த அதிகாரிகள் அதற்கான காரணத்தை முறையாக தெரிவிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. மேலும் மத்திய அரசு எந்த வெளிநாட்டு உளவு நிறுவனங்களையும் இந்திய மண்ணில் விசாரணைக்கு அனுமதிக்ககூடாது என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. காஜ்மியின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராட்டுகிறது.

இவ்வாறு தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இஸ்ரேலின் தூண்டுதலால்தான் காஜ்மி கைது செய்யப்பட்டுள்ளார் - பாப்புலர் ஃப்ரண்ட்"

Post a Comment