தலைப்புச் செய்தி

Tuesday, March 20, 2012

இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் டொக்டர் விரைவில் விடுதலை ஆவாரா?


பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த டொக்டர் கலீல் செஸ்டி(வயது 80), இவர் கடந்த 1992ம் ஆண்டு ராஜஸ்தானில் தனது உறவினரை பார்க்க வந்த போது சொத்து தகராறில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.
ஜெய்‌ப்பூர் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது கலீல் அஜ்மீர் சிறையில் உள்ளார்.


இந்நிலையில் இவரது வயது, உடல் நிலையை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுக்க கோரி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ பிரதமருக்கு கடிதம் எழுதினார். ராஜஸ்தான் முதல்வரும் அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்தார்.


இந்நிலையில் இவர் மீதான அப்பீல் மனு விசா‌ரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.


நீதிபதிகள் சதாசிவம் மற்றும் செல்லமேஸ்வர் ஆகியோர் விசாரித்து, கலீல் செஸ்டியை விடுவிப்பது குறித்து மத்திய அரசு இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


ஏற்கனவே செஸ்டியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாலும்,கடந்த ஆண்டு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது மத்திய அரசும் இவருக்கு கருணை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


இதைத்தொடர்‌ந்து கடந்த 19 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டு, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என தெரிகிறது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் டொக்டர் விரைவில் விடுதலை ஆவாரா?"

Post a Comment