திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசியதை தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் பதவியை தினேஷ் திரிவேதி நேற்று இரவு ராஜினாமா செய்தார்.
இதன்மூலம், நான்கு நாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. இவருக்கு பதிலாக, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முகுல் ராய், ரயில்வே அமைச்சராகிறார்.
ஐமு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் பதவியை ஏற்றார்.
தனக்கு பதிலாக, தனது கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதியை ரயில்வே அமைச்சராக்கினார். கடந்த 14ம் தேதி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணத்தை திரிவேதி உயர்த்தினார்.
தனக்கே தெரியாமல் கட்டணத்தை திரிவேதி உயர்த்தி விட்டதாக குற்றம்சாட்டிய மம்தா, அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.
அவருக்கு பதிலாக தனது கட்சியை சேர்ந்த கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக நியமிக்கும்படியும் கடிதத்தில் அவர் பரிந்துரை செய்தார். பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு திரிவேதியை நீக்குவது பற்றி முடிவு தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி திரிவேதியிடம், திரிணாமுல் காங்கிரஸ் தலைமை கொறடா கல்யாண் பானர்ஜி கூறினார்.
இதை நிராகரித்த திரிவேதி, ‘மம்தாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் கிடைத்தால் மட்டுமே பதவி விலகுவேன்’ என கூறினார்.
திரிவேதியை நீக்கும் முடிவை காங்கிரஸ் எடுக்காவிட்டால், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தினேஷ் திரிவேதியை நீக்க மம்தா பானர்ஜி எந்த கெடுவும் விதிக்கவில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு பின் இரண்டு நாளில் மாற்றம் செய்வதாக பிரதமர் உறுதி அளித்திருந்தார்’’ என்றனர்.
இது குறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த திரிவேதி, ‘‘அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. அதேநேரம் ஓடிப்போகவும் விரும்பவில்லை. ரயில்வே யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. மம்தா மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் என்றார்.

‘ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யும்படி திரிணாமுல் காங்கிரஸ் கேட்டுக் கொள்ள வில்லை’ என திரிணாமுல் எம்பி சுதீப் பந்தோபத்யா நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், “கட்சி கொறடா ராஜினாமா செய்ய சொன்னார். இதனால்தான் குழப்பம் ஏற்பட்டது’’ என்றார்.
இந்நிலையில், மம்தா நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு திடீரென சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், திரிவேதி என்னிடம் பேசினார். கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு ராஜினாமா செய்வதாக கூறினார். ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்’’ என்றார்.

இதன்மூலம், 4 நாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. திரிவேதி ராஜினாமாவை தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக முகுல் ராய் பதவியேற்க உள்ளார்.
0 comments: on "மம்தா பானர்ஜி அழுத்தம்: ரயில்வே அமைச்சர் இராஜினாமா! புதிய அமைச்சராக முகுல் ராய்!!"
Post a Comment