மாணவர் தீக்குளித்து இறந்ததால் தெலங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வாரங்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த பந்தின்போது வன்முறை ஏற்பட்டது.
ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும், சமீபகாலமாக பதற்றம் தணிந்திருந்தது. இந்நிலையில், வாரங்கல் மாவட்டத்தில் ஹனம்கொண்டா நகரில் போஜ்யா நாயக் என்ற 21 வயது எம்.பி.ஏ. மாணவர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் தெலங்கானா போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. வாரங்கலில் மாவட்ட அளவிலான பந்த்துக்கு நேற்று அழைப்பு விடப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் ஊர்வலங்கள் நடந்தன.
தீக்குளித்த மாணவரின் இறுதி ஊர்வலம் வாரங்கலில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவர்களும் தெலங்கானா ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
தீக்குளித்த மாணவரின் இறுதி ஊர்வலம் வாரங்கலில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவர்களும் தெலங்கானா ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதனால், மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் வேறு சில இடங்களிலும் தெலங்கானா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அரசு கொறடாவுமான ஜி.வி. ரமண ரெட்டியின் வீடும் கல்வீசி தாக்கப்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். பல இடங்களில் காங்கிரஸ் கொடிகளை போராட்டக்காரர்கள் எரித்தனர்.
தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் அளித்த பேட்டியில், ‘’எம்.பி.ஏ. மாணவர் மரணத்துக்கு தெலங்கானாவை எதிர்க்கும் காங்கிரசும் தெலுங்கு தேசம் கட்சியுமே பொறுப்பு. இது ஒரு அரசியல் படுகொலை’’ என்றார். முதல்வர் இரங்கல்: மாணவர் போஜ்யா நாயக் மரணத்துக்கு முதல்வர் கிரண் குமார் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது என்றும் தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று முழு அடைப்பு தெலங்கானா பகுதி முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது.

0 comments: on "மீண்டும் வெடித்தது தெலங்கானா விவகாரம் மாணவர் தீக்குளிப்பு: வாரங்கலில் பதற்றம்"
Post a Comment