
யானையை அந்த பகுதியில் கட்டி வைத்திருந்தனர். அந்த வழியாகச் சென்ற ரங்கன்(வயது 31) என்பவர் தனது கையிலிருந்த பழத்தை யானைக்கு கொடுத்துள்ளார்.
அந்நேரத்தில் யானைக்கு திடீரென்று மதம் பிடித்து, ஆக்ரோஷமாக பிளிறி, தனது தந்தத்தால் ரங்கனின் கழுத்தில் குத்தியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ரங்கனை அகளியில் உள்ள அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் அவரது குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
|
0 comments: on "தந்தத்தால் குத்திக் கொலை செய்த யானை: பழம் கொடுத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்"
Post a Comment