தலைப்புச் செய்தி

Sunday, March 25, 2012

பொது விநியோக திட்டத்தில் ஊழல்: 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு


உத்திரபிரதேச மாநிலத்தில் பொது விநியோக திட்டத்தில் முறைகேடு நடைபெற உறுதுணையாக இருந்ததாக பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என சுமார் 2 ஆயிரம் பேர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


உத்திர பிரதேச மாநிலத்தில் ப‌ொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருளில் ஊழல் செய்திருப்பதாக விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.


இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மத்திய புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டது.


இதன் அடிப்படையில் மாநிலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் முனனாள் அமைச்சர் ஓம்.பிரகாஷ்குப்தா மற்றும் அவரது சகோதரர் வினோத்குமார் சிங் அகா பண்டிட்சிங் ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் வினோத் குமார் சிங் கடந்த 2003ல் நடைபெற்ற முலாயம் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


தற்போது நடைபெறும் அகிலேஷ் அமைச்சரவையிலும் இவர் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர்கள் மட்டுமல்லாது போக்குவரத்திற்கு உதவி புரிந்ததாக நிதிநிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உட்பட பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்‌குபதிவு செய்துள்ளது.


எந்த ஒரு வழக்கு ஒன்றிற்காகவும் சுமார் 2 ஆயிரம் மீது வழக்‌கு பதிவுசெய்யப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல்‌முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பொது விநியோக திட்டத்தில் ஊழல்: 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு"

Post a Comment