தலைப்புச் செய்தி

Tuesday, March 13, 2012

விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணங்களை உயர்த்த இந்திய அஞ்சல் துறை முடிவு


அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிக்க விரைவு அஞ்சல், மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த தபால்துறை முடிவுசெய்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் கடந்த 2002-ம் ஆண்டில் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது.


அதன் பின்பு கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.


ஆனால் அச்சிடும் செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அஞ்சல் துறை கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.


கடந்த 2006-2007ம் நிதியாண்டில் ரூ.1,249.52 கோடியாக இருந்த அஞ்சல் துறையின் நஷ்டம் 2009-10ம் நிதியாண்டில் 5,632.46 கோடியாக அதிகரித்துள்ளது.
6-வது சம்பள ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் அஞ்சல்துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவு பெருமளவு அதிகரித்துள்ளதால் நடப்பு ஆண்டுகளில் நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே விரைவு அஞ்சல் மற்றும் மணி ஆர்டர் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த தபால்துறை திட்டமிட்டுள்ளது.


மேலும் அஞ்சல் அட்டை மற்றும் இன்லேண்ட் லெட்டர் விலையை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் திகதி முதல் அமலுக்கு வரலாம் என்று தெரிகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணங்களை உயர்த்த இந்திய அஞ்சல் துறை முடிவு"

Post a Comment