தலைப்புச் செய்தி

Thursday, March 22, 2012

ஈராக்கியரை கொலை செய்த நபர்களை அமிலத்தில் கரைத்த கொலைக்கார குடும்பம்


ஜேர்மனியில் ஒரு குடும்பத்தினர் இரண்டு பேரைக் கொன்று விட்டு அவர்களை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தை கேட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தக் கொலைகாரக் குடும்பத்தின் தாயும், இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டாலும் தந்தையும், மகளும் தப்பித்து விட்டனர். இவர்கள் வெனிசூலா நாட்டுக்கு ஓடி ஒளிந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
இவர்கள் ஜேர்மனியின் எல்லைப் பகுதியான டூடெர்னில் வசிக்கின்றனர். இவர்கள் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கொலை செய்த நபர்களில் ஒருவர் பெல்ஜியத்தையும், மற்றொருவர் ஈராக் நாட்டையும் சேர்ந்தவர் ஆவர். ஈராக் நாட்டைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ஆலன் கெர்கெரியைக் கத்தியாலும் கூர்மையான பனிக்குச்சியாலும் குத்திக் கொன்றனர்.
அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து மஹம்மது அல்ஜேடர் என்ற மற்றொரு ஈராக்கியரை இந்தக் குடும்பம் சுட்டுக் கொன்றது. இவன் இந்தக் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வந்ததால் இவன் மீது 10-12 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த இரண்டு கொலைகளில் ஒன்று பெல்ஜியத்தில் நடைபெற்றாலும், இந்தக் குடும்பத்தினர் உடல்களை ஜேர்மனியில் உள்ள தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றே அப்புறப்படுத்தியுள்ளனர். வீட்டில் வைத்து துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்துள்ளனர்.
அல் ஜேடர் காணவில்லை என்பதால் அவனைத் தேடிய காவல்துறையினர் அவனது சிதைந்த உடல் துண்டுகளைக் கண்டெடுத்தனர். இன்னொரு உடலின் சில பாகங்களும் கிடைத்தன.
அப்போது தான் இருவரும் புதிய முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது பற்றிக் கூறிய அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு எதிர்வரும் 2013ம் ஆண்டு மே மாதம் தொடங்கும் என்றார்.
இந்தக் கொலைகளில் ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் அரிதான செயலாக இருப்பதாகவும், இதற்குத் தீவிர தடயவியல் தொழில்நுட்பம் தேவைப்படுவதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஈராக்கியரை கொலை செய்த நபர்களை அமிலத்தில் கரைத்த கொலைக்கார குடும்பம்"

Post a Comment