தலைப்புச் செய்தி

Tuesday, January 24, 2012

பரபரப்பை ஏற்படுத்தி​யுள்ள கல்லூரி மாணவனின் செயல்


இந்தியாவின் மத்திய பிரதேசத்தை மாநிலத்தில் பொது நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் மந்திரி உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரி ஒருவரின் சப்பாத்து நூல் கழன்றிருந்ததால் அதனை கௌரி சங்கர் பெய்சன் என்ற 18 வயது கல்லூரி மாணவன் கட்டிவிட்டான்.
இச்சம்பவத்தை அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்படக் கமராக்களும், வீடியோ கமராக்களும் சுட்டுத்தள்ளிவிட்டன. இதனால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





இதுபற்றி கருத்து தெரிவித்த குறித்த மந்திரி, தான் அமர்ந்திருந்த நேரம் சப்பாத்தின் நூல் கழன்றிருப்பதை அம்மாணவன் அவதானித்திருக்கின்றான், அதே நேரம் தனக்கு இதயத்தில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருப்பதையும் அறிந்திருக்கின்றான்.


எனவே தான் இவ்வாறான செய்கையில் அவன் ஈடுபட்டுள்ளான் என்றும், இச்சம்பவத்திற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பரபரப்பை ஏற்படுத்தி​யுள்ள கல்லூரி மாணவனின் செயல்"

Post a Comment