தலைப்புச் செய்தி

Monday, January 16, 2012

நாட்டின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமை இயற்கை எய்தினார்


இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளரான ஹோமை வியாரவல்லா(வயது 98) இன்று(15.1.2012) தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.
கடந்த 1913ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி பார்சி குடும்பத்தில் பிறந்த ஹோமை வியாரவல்லா மும்பையில் வளர்ந்தார்.


1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த அவர் பிரிட்டிஷ் தகவல் சேவையில் ஒரு ஊழியராக பணிபுரிந்தார். அந்த நேரத்தில் இந்திய சுதந்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை ஹோமை படம் பிடித்துள்ளார்.


1947ம் ஆண்டு ஓகஸ்ட் 15ம் திகதி டெல்லி செங்கோட்டையில் நடந்த முதல் கொடி ஏற்றம், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களின் இறுதி சடங்குகளையும் ஹோமை வியாரவல்லா புகைப்படம் பிடித்துள்ளார்.


கடந்த 2011 சனவரி மாதம் ஹோமை வியாரவல்லாவுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நாட்டின் முதல் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் ஹோமை இயற்கை எய்தினார்"

Post a Comment