தலைப்புச் செய்தி

Monday, January 16, 2012

12வது ஐந்தாண்டு திட்டத்தில் 20 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகள் தேவை: மத்திய குழு


இந்தியாவில் எதிர் வருகிற 12வது ஐந்தாண்டு திட்டத்தில் 20 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகள் தேவைப்படும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவை பொறுத்த வரையில் கர்நாடகாவில் 1241, ஆந்திராவில் 456, கேரளாவில் 112, தமிழகத்தில் 690 உயர்நிலைப்பள்ளிகள் தேவைப்படுகின்றன.
வட இந்தியாவை பொறுத்த வரையில் உத்திர பிரதேசத்தில் 3 ஆயிரம் பள்ளிகளும், குஜராத்தில் 2,256 பள்ளிகளும், மத்திய பிரதேசத்தில் 2,180 பள்ளிகளும், பீகாரில் 1,264 மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 1006 பள்ளிகளும் தேவைப்படுகின்றன.


மேலும் தலைநகர் புதுடெல்லியில் 51 பள்ளிகள் கூடுதலாக தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து மத்திய அரசின் திட்டமான ராஷ்டீரிய மத்ய மிக்சிக்ஷா அபியான் திட்டத்தை +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்று மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.


மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தம்முடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கு குறைந்த பட்சம் அடிப்படை கல்வியை கற்றிருக்க வேண்டும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சர்வ சிக்ஷ அபியான் திட்டம் நல்ல பயனை தந்துள்ளதாகவும் மத்திய குழு கூறியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஒரு லட்‌சத்து 23 ஆயிரம் பள்ளிகள் இயங்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டக்கமிஷன் மூலம் அமைக்கப்பட்ட குழு தயாரித்த இந்த அறிக்கை பிரதமர் தலைமையிலான ‌தேசிய வளர்ச்சி சபையிடம் சமர்பிக்கப்பட்டு இறுதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "12வது ஐந்தாண்டு திட்டத்தில் 20 ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகள் தேவை: மத்திய குழு"

Post a Comment