தலைப்புச் செய்தி

Wednesday, January 25, 2012

ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரன் - திக்விஜய் கடும்தாக்கு


நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த  ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவரை நோக்கி ஷூ வீசிய  நபர் பாபா ராம்தேவ் சாமியாரின் தூண்டுதலின்பேரிலேயே அவ்வாறு செய்தார்   என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

அந்த ஷூ ராகுலுக்கு 10 அடிக்கு முன்பாக விழுந்தது. அதை வீசியவர் பெயர்    குல்தீப் என்று தெரியவந்துள்ளது. அவரை எதுவும் செய்யவேண்டாம் என்று  ராகுல் கேட்டுகொண்டுள்ளார்
.
இந்நிலையில் இந்த ஷூ வீச்சுக்கு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று   கூறியுள்ள திக்விஜய்சிங் "ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரன்; கறுப்புப் பணத்தை  வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற்றவர்.அமலாக்கத்துறை விசாரணை அவர் மீது  நடைபெற்று வருகிறது. 

ஸ்காட்லாந்தில் இருந்து தீவு ஒன்றை வாங்குவதற்கு   அவருக்கு எங்கிருந்து  பணம் வந்தது? பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவை  ராம்தேவ் கோரியுள்ளார்  என்று  திக்விஜய் சிங் கடும் குற்றச் சாட்டை   சுமத்தியுள்ளார்.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரன் - திக்விஜய் கடும்தாக்கு"

Post a Comment