வடமேற்கு பாகிஸ்தான் ஷப்காதர் நகரில் வசிக்கும் முகாராம் கான் அதிஃப் என்ற பத்திரிகையாளர், அமெரிக்காவின் ’வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் வீட்டின் அருகில் உள்ள மசூதியில் மாலை நேர பிரார்தனையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய 2 பேர் திடீரென அங்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது,இந்த கொலை சம்பவத்துக்கு பத்திரிகையாளர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் பீதியில் உள்ள பத்திரிகையாளர்கள், உடனடியாக பாக். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறித்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த வருடம் மட்டும் 10 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: on "அமெரிக்க பத்திரிகையாளர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை"
Post a Comment