இணையக் களஞ்சியமான விக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இணையத்தளங்களில் பதிப்புரிமை பெற்ற அறிவு சார் சொத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இக்கருத்துக்களை பலர் திருட்டுத் தனமாக எடுத்துப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்(எஸ்.ஓ. பி.ஏ) மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு தடுப்புச் சட்டம் 2011(ப்ரொடக்ட் ஐபி) இரு சட்டப் பிரேணணைகள் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்க காங்கிரசில் தாக்கலாயின.
இவை அமெரிக்க காங்கிரசில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படவுள்ளன. இவைகள் இணையத்தளங்களின் சுதந்திரச் செயல்பாடுகளை முடக்கி விடும் என கூகுள், யாஹூ மற்றும் விக்கிபீடியா உட்பட பல்வேறு இணைய நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இணைய கலைக் களஞ்சியமான விக்கிபீடியா அறிவித்தது.
இதுகுறித்து விக்கிபீடியா நிறுவனத்தின் தொடர்புத் துறைத் தலைவர் ஜே வால்ஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டங்கள் இணையத்தின் சுதந்திர மற்றும் கட்டுப்பாடற்ற செயல்களை முடக்கிவிடும். அமெரிக்காவில் இயங்கிவரும் இணையத்தளங்களை தணிக்கை செய்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தரும் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வேலை நிறுத்தம் அமெரிக்காவில் மட்டுமே. உலகின் பிற பகுதியினர் வழக்கம் போல் விக்கிபீடியாவைப் பயன்படுத்தலாம். மேலும் அமெரிக்காவில் இயங்கும் ரெட்டிட், போயிங் போயிங் போன்ற நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
0 comments: on "வீக்கிபீடியா இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்"
Post a Comment