தலைப்புச் செய்தி

Wednesday, January 11, 2012

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணி தற்காலிக நிறுத்தம்


இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொண்டு வந்த ஆய்வுப்பணி இயந்திரம் பழுதானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரள அரசுகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
கேரளா அரசு, முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடத்தில் அமைந்துள்ளதால் அணை உடையும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று கூறி வந்தது.


இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உத்தரவின் படி புனேயில் உள்ள மத்திய நீர்மின் ஆராய்ச்சி மையம் சார்பில் நவீன இயந்திரம் மூலம் முல்லைப் பெரியாறு அணையின் மத்திய பகுதியில் துளையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் 6 இடங்களில் துளையிட்டு ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நவீன இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஆய்வுப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணி தற்காலிக நிறுத்தம்"

Post a Comment