இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கின. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது .இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 . 3 -ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கிலோமீட்டர் தென்மேற்கு திசையில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பான்டாஏக் மக்கள் பீதியில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர். சேதங்களை பற்றிய தகவல் இதுவரை ஏதும் தெரியவில்லை.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்திய பெருங்கடலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
0 comments: on "இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்"
Post a Comment