தலைப்புச் செய்தி

Sunday, January 22, 2012

காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!

சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.


ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன. விவேகானந்தர் அவர்கள் வர்ணாசிரமக் கொள்கைக்கு எதிரானவராக இருந்தார். அப்பேற்பட்ட வர்ணாசிரமக்கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்துராஷ்டிராவை உருவாக்க வேண்டும் என சங்கப்பரிவாரங்கள் திட்டமிட்டு வருகின்றனர். இந்தியாவில் பல இடங்களில் தலித் சமூகத்தவரையும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் கோயிலுக்குள் அனுமதிப்பதே இல்லை, மேலும் இந்த சங்கப்பரிவாரங்களால் தினமும் ஒரு தலித் இந்தியாவில் தாக்கப்பட்டு வருகிறான் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. நாங்கள் இந்துக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் பணி செய்கிறோம் என்பதை காட்டி அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்வதற்காகவே விவேகானந்தரின் புகைப்படத்தை இவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

விவேகானந்தரின் போதனைகளை வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தி அதன் மூலம் சாதி வெறியை தூண்டுவதிலும், மதவெறியை தூண்டுவதிலும் முனைப்போடு செயல்படுகின்றனர் இந்த காவி பயங்கரவாதிகள். "சங்கப்பரிவாரங்களின் பிடியிலிருந்து விவேகானந்தரை மீட்க வேண்டிய தருணம் இது"  என முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் குமார் கூறியுள்ளார்.

விவேகானந்தரை தங்களது ஃபாசிஸ பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதையும், மூத்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்தும் பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இவ்வாறு கூறினார் தினேஷ் குமார்.


கன்னட டெய்லி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் தினேஷ் அமின் மாத்து சமீபத்தில் விவேகானதிரின் வாழ்க்கை முறையை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சங்கப்பரிவாரங்கள் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அப்பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தினேஷ் அமின் மாத்து அவர்கள் விவேகானந்தர் பற்றிய உண்மை வரலாற்றையே எழுதியுள்ளார். ஏன் இதனை சங்கப்ரிவாரங்களால ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை?  அதவிடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் அவர்களது அலுவலகங்களை தாக்குவதும் கடும் கண்டனத்துக்குறியதாகும் என தினேஷ் குமார் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கான கமிஷனின் முன்னால் தலைவருமான டாக்டர் சி.எஸ்.துவார்காந்த் கூறும்போது தினேஷ் அமின் மாத்து சிறந்த ஒரு பணியை செய்துள்ளார். விவேகானந்தரின் வாழ்க்கை முறையை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார். அவர் எழுத்திய கட்டுரை இதனால் வரை சங்கப்பரிவாரங்கள் விவேகானந்தர் பற்றி கூறி வந்த வரலாறுகள் அனைத்தும் பொய் என்று தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.

வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் நரசிம்மையா கூறும்போது விவேகானந்தர் அவர்கள் பகுத்தறிவு கொண்ட புரட்சிகரமான‌ இந்து மத துறவியாக வாழ்ந்தார். ஜாதி கொள்கையிலும் தீண்டாமைக்கொள்கையிலும் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். எல்லா மனிதர்களும் சமமே என்றும் எந்த ஒரு மதமும் இன்னொரு மதத்தோடு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல என்று வாழ்ந்தார். அவரை பொறுத்தவரை அனைத்து மதமும் உண்மை என்றும் சமமானது என்று நம்பியதாக கூறினார்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு அதனை உரிய இடங்களில் வைத்து பரிமாறிக்கொள்ளலாம். அதனை விடுத்து பத்திரிக்கை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவதும், மூத்த எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற செயல்கள் தீர்வாக அமைந்துவிடாது. இத்தகைய செயல்கள் கருத்துச்சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

"சங்கப்பரிவார சக்திகளை முன்னொரு காலத்தில் எதிர்க்கக்கூடிய அளவில் எந்த ஒரு இயக்கமும் இல்லாத நிலையில் அவர்கள் பல்வேறு வரலாறுகளை திரித்து மக்கள் மத்தியில் துவேஷத்தை ஏற்படுத்தி வந்தனர். ஆனால் காலம் மாறிவிட்டது. அவர்களை எதிர்ப்பதற்கும் வலுவோடு அவர்களை எதிர்த்து போராடுவதற்கும் இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் உருவாகிவிட்டனர். இதனை அவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்" என சந்திரசேகர் என்பவர் கூறினார்.

"மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் மற்றும் பத்திரிக்கை அலுவலகங்கள் தகர்ப்பு போன்ற செயல்களின் மூலம் என்ன கூற வருகிறார்கள்? அவர்களுக்கென்று இருந்த சிறிதளவு நற்பெயரும் சிந்தகி மாவட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை ஏற்றி பிடிபட்டவுடன் கெட்டுவிட்டது" என்று கூறினார்.

ஆக மொத்தத்தில் சங்கப்பரிவார கூட்டங்கள் இந்துக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிவிட்டு மீண்டு வர்ணாசிரமக்கொள்கையான தீண்டாமைக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், பிராமணர்களின் ஆதிக்கத்தை உருவாக்கவும் அப்பாவி இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!"

Post a Comment