தலைப்புச் செய்தி

Tuesday, January 3, 2012

உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்


லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக  ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில் ஃபேஸ்புக்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. குறைந்தது 5000 வழக்குகளில் 33 சதவீதம் மக்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களிடம் பேசிக்கொள்ள பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். முன்னாள் காதலர்களை சந்திக்கின்றனர். எதார்த்தமாக ஆரம்பிக்கும் பேச்சு பிரச்சினையில் போய் முடிகின்றது. யாரேனும் காதலிக்க அல்லது காதலிப்பது போல் நடிக்க விரும்பினாலோ, அதற்கு ஃபேஸ்புக் சுலபமான வழி என்று கூறுகிறார் இணையதள விவாகரத்துக்கான நிர்வாக இயக்குநர் மார்க் கீணன்.
பிரச்சினைகளுக்கு ஃபேஸ்புக் முக்கிய காரணம் என்று கூறுவது, ஏனென்றால் கணவன் அல்லது மனைவிக்கு வரும் காதல் மடல்களை காணும்போது, அவர்களுக்கு தெரியாமல் சென்ற பார்ட்டி அல்லது அவர்கள் விரும்பாதவர்களுடன் இருப்பது போன்ற ஃபோட்டோக்களையோ காண்பதுதான்.
கணவன் அல்லது மனைவி யாரேனும் எதையாவது மறைத்தால் ஃபேஸ்புக் நிச்சயம் சுலபமாக காட்டிக் கொடுத்துவிடும். விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டாம் என்று தனது வாடிக்கையாளர்களை கீணன் எச்சரிப்பாராம்.
ஃபேஸ்புக்கில் என்னென்ன பதிவுகள் செய்கிறோம் என்று மக்கள் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் குழந்தைகள் மற்றும் நிதிப்பிரச்சனைகளுக்கு ஃபேஸ்புக்கில் மக்களின் பதிவுகளை வைத்து ஆதாரம் நீதிமன்றங்களுக்கு கிடைக்கின்றது என்கிறார்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்"

Post a Comment