இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல்துறை செயலாளர் கே பாஸ்கரன் நாராயணன், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கே ஆர் ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே என் சங்கரா ஆகிய 4 விஞ்ஞானிகள் மீது எஸ்.பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசின் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள், வருங்காலத்தில் அரசுப்பணி ஏற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் நகல் நாட்டிலுள்ள அரசுத் துறை செயலாளர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசின் இந்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஒப்பந்தம் குறித்து தற்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை. அவர் ஹிட்லர் போல் செயல்படுகிறார். என் மீதும், மற்ற மூவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததற்கு அவர் தான் காரணம்.
இந்த உத்தரவு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வண்ணம் உள்ளது. உத்தரவை எதிர்த்து கோர்ட்டிற்கு செல்லும் உரிமை எனக்கு உள்ளது.
நியாயத்திற்கு முரணாக அரசின் இந்த நடவடிக்கை உள்ளது. நான் பயங்கரவாதியை விட மோசமானவனா?" என்று மாதவன் நாயர் கேள்வி எழுப்பினார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இஸ்ரோவின் முன்னாள் அறிவியல்துறை செயலாளர் கே பாஸ்கரன் நாராயணன், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கே ஆர் ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே என் சங்கரா ஆகிய நால்வர் மீதும் குற்றப்பத்திரிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் பிரதியுஸ் சின்ஹா குழுவின் அறிக்கையைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

0 comments: on "நான் என்ன பயங்கரவாதியா? - "இஸ்ரோ" மாதவன் நாயர் ஆவேசம்!"
Post a Comment