இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, 15 பேர் கொண்ட அனைத்துக்கட்சி பாராலிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தனர்.
இன்று இஸ்லாமாபாத்தில் அவர்கள் பாகிஸ்தான் பாராலிமென்ட் எம்.பி.க்கள் குழுவினரை சந்தித்து பேசுகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பரஸ்பரம், ஒத்துழைப்பு நல்கவும், வர்த்தக பொருளாதார விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய எம்.பி.க்கள் குழுவினர் பாகிஸ்தான் சென்று இஸ்லாமாபாத் நகரில் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அதே ஆண்டு(2011)
ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த பாக். பாராலிமென்ட் எம்.பி.க்குழுவினர் டெல்லியில் இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று மூன்றாவது சுற்றுப்பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத் நகரில் இரு நாட்டு பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினரிடையே நடக்கிறது.
இதில் இந்தியாவின் 15 எம்.பி.க்கள் கொண்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இக்குழுவில், மணிசங்கர அய்யர், டி.ராஜா, சத்ருகன்சின்ஹா, யாஷ்வந்த்சின்ஹா, ஷாநவாஸ் ஹூசைன், திபெந்தர்ஹூடா, ஹமத்துல்லா சையத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இன்றும் நாளையும் (17.01.2011 - 18.01.2011) இப்பேச்சுவார்த்தை நடக்கிறது. பாகிஸ்தானில் தற்போதைய அரசியல் சூழ்நிலை சிக்கலாக உள்ள நிலையில், இக்குழுவினரின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
0 comments: on "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்"
Post a Comment