ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது சகாக்களும் இணைந்து அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
இந்த ஊழலில் அரசு அதிகாரிகள் சிலருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக விற்கப்பட்ட இந்த நிலங்கள், வளர்ச்சி பணிகளுக்காக அரசு நிர்ணயித்திருந்த இடங்களாகும்.
அரசியல்வாதிகள் பலரால் பங்கீட்டு விற்பனை செய்யப்பட்ட இந்த நிலங்கள் சுமார் 1275 ஏக்கர் என பெங்களூரு வளர்ச்சி கழகம் மதிப்பிட்டுள்ளது.
பெங்களூரு வளர்ச்சி கழகம் அளித்துள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில் இந்த மெகா நில மோசடியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள், அரசு அதிகாரிகள், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான ரியல் எஸ்டேட் ஏஜென்ட்கள் என ஒரு பெரிய குழுவே ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆனால் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள இந்த அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் மூலம் சட்டப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு வருவாய்த்துறை துணை கமிஷ்னர் ராமகாந்த், குறிப்பிட்ட நிலங்கள் வாங்குவதற்கான மனு எங்களிடம் வந்த போது நாங்கள் அதை நிராகரித்ததுடன் பெங்களூரு வளர்ச்சி கழகத்தின் என்.ஓ.சி சான்றிதழையும் கேட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார். |
0 comments: on "மீண்டும் ஊழல் முறைப்பாட்டில் சிக்கினார் எடியூரப்பா"
Post a Comment