மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அஜ்மல் கசாப்பின் கருணை
கூடுதல் தகவல்களுடன் இந்திய பிரதமர் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
உலகில் மாறி வருகிற தகவல் தொழில்நுட்ப புரட்சியின்படி இணையதளம் பயன்படுத்துவோரின் வசதிக் கேற்ப பிரதமர் அலுவலக இணையதளம் கூடுதல் தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பு அம்சமாக விரைவில் காணொளி காட்சிகளும் இடம் பெற உள்ளன.
இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிக்கையினை உடனுக்குடன் வழங்கிடும் வகையில், பிரதமர் அலுவலக செய்தி குறிப்புகள் மற்றும் அலுவல் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைத்திடும் வகையில் இணையதளம் புதுப்பிக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி பிரதமரின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் சொத்து விபரங்களை முழுமையாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊடகங்களுக்கு தேவையான தகவல்களை பெறவும், பிரதமரின் நேர்முக பேட்டி முதலான விபரங்களை விரைவில் பெறவும், கருத்துக்களை தெரிவிக்கவும் புதிய இணையதளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
comments:
on "பிரதமர் அலுவலக இணையதளத்தில் கூடுதல் தகவல்கள் அறிமுகம்"
0 comments: on "பிரதமர் அலுவலக இணையதளத்தில் கூடுதல் தகவல்கள் அறிமுகம்"
Post a Comment