உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநில ஆளுநர் ஜனவரி 10-ம் தேதி ஆணை பிறப்பிப்பதாக இருந்தது. இந்நிலையில், லக்னெüவில் கடந்த இரு தினங்களாக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பிப்ரவரி 4-ல் முஸ்லிம் பண்டிகை தினமாகும் என்று தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல் கட்டத் தேர்தலுக்கான ஆணையைப் பிறப்பிக்க வேண்டாம் என்று மாநில ஆளுநரிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.





0 comments: on "உத்தரப் பிரதேச முதல் கட்ட தேர்தல் தேதி மாற்றம்"
Post a Comment