நியூஸிலாந்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெப்பவாயு பலூன் வெடிப்பு சம்பவத்தில் விமானி உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிங்டன் நகருக்கு வடகிழக்கிலுள்ள கார்டேர்டன் பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலூனில் இருந்த ஒருவரும் காப்பாற்றப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பலூன் தீப்பற்றியதால் தரையில் வீழ்ந்திருக்கலாம் என வெலிங்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மைக் ரஸ்பெச் தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்தில் தீ பரவ தொடங்கியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும் மேற்படி பலூன் மின்கம்பியில் மோதியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.





0 comments: on "நியூஸிலாந்தில் வெப்ப வாயு பலூன் விபத்தில் 11 பேர் பலி"
Post a Comment