வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் பேர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.
2010ம் ஆண்டில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பயணிகள் மூலம் அமெரிக்காவுக்கு 15 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. ஆயிரகணக்கானோருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 2.72 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா சென்றிருந்தனர்.
ஆனால் 2010ம் ஆண்டில் 139 சதவீதம்அதிகரித்து 6,51 லட்சம் பேர் அமெரிக்கா சென்றுள்ளனர். வரும் 2016ம் ஆண்டில் இந்தியர்களின் சதவீதம் 2010ம் ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் அதிகரிக்கும் என நம்புவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்கூறினார்.
அதேபோல் சீனாவிலிருந்து 135 சதவீதம் பேரும், பிரேசிலிலிருந்து 274 பேரும் இந்தியாவை காட்டிலும் அதிகமாக வருவார்கள் என கூறினார். கடந்த 2010ம் ஆண்டில் அமெரிக்கா வந்த இந்தியர் ஒவ்வொருவரும் சராசரியாக 4,390 அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளனர். |
0 comments: on "சுற்றுப்பயணத்திற்கு 2.86 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்த இந்தியர்கள்"
Post a Comment