உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வருகிற 28-ந்தேதியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்குகிறது. மார்ச் 3-ந்தேதியுடன் ஓட்டுப்பதிவு முடிகிறது. 6-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
5 மாநில தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பறக்கும் படையினர் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் கொண்டு செல்ல இருந்த 2 வேன்களை தடுத்து நிறுத்தி அதில் இருந்த ரூ.13 கோடியை பறிமுதல் செய்தனர்.
2 தனியார் வங்கிகளிடம் இந்த பணத்திற்கு விளக்கம்கேட்டது. இதுவரை விளக்கம் தரப்படவில்லை என்று வருமானவரி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3 மாநிலங்களில் சேர்ந்து இருவரை ரூ.35.89 கோடி பணத்தை தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ரூ.26.8 கோடியும், பஞ்சாப்பில் ரூ.8.67 கோடியும், உத்தரகாண்டில் ரூ.42 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
0 comments: on "உத்தரபிரதேச தேர்தல்: ஓட்டுக்கு பணம்- ஏ.டி.எம். வேனில் இருந்து ரூ.13 கோடி பறிமுதல்"
Post a Comment