இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.
இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.
இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.
1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.
சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.
முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.
ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.
ஆனந்த மடம் நாவலில் ஹிந்து முஸ்லிம்களிடையே கலவரம் நடைபெறும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட வந்தே மாதரம் என்ற பாடலை தேசிய கீதமாக மாற்றவேண்டும் என ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கூக்குரல் எழுப்புகின்றனர். இந்தியாவை துர்கா தேவியாக வர்ணிக்கும் இப்பாடல் மார்க்க கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானது என முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் எதிர்க்கின்றனர்.
இவ்வேளையில் கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிய “ஸாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மிகச் சிறந்த நாடு இந்தியா) என்ற அருமையான பாடலை தேசப்பற்று வேடம் போடுவோர் வசமாக மறந்துவிட்டதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.





0 comments: on "ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது"
Post a Comment