தலைப்புச் செய்தி

Sunday, December 18, 2011

ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு


ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி(54) என்பவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், என் கணவர் வாலி சாப்தி(57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால் என் கணவருக்கு ஆங்கிலம் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை.
புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இனமொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை.
இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும், மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம் என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு"

Post a Comment