இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி ஜே.பவாலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.
திமோதி ரோமர் கடந்த ஏப்ரல் மாதம் தனது இந்தியாவிற்கான தூதர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு நான்சி பவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நான்சி பவால் இப்பதவியில் நீடிப்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நான்சி பவால் பாகிஸ்தான் மற்றும் நேபாள நாட்டின் அமெரிக்க தூதராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல், கொல்கத்தா, புதுடெல்லி, டாக்கா, காத்மண்ட், இஸ்லாமாபாத் மற்றும் ஒட்டாவா நகரங்களில் செயற்பட்டு வரும் அமெரிக்க அலுவலகங்களில் உயர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments: on "இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நியமனம்"
Post a Comment