தலைப்புச் செய்தி

Sunday, December 25, 2011

பேஸ்புக்,யுடியூப் தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு


ஆபாசப் பதிவுகள் அதிகமாக இருப்பதால் பேஸ்புக்,யுடியூப் உள்ளிட்ட 21 இணையத்தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,கூகுள்,யுடியூப் ஆகியவற்றை நாள்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தளங்களில் அண்மைக்காலமாக அதிக அளவில் ஆபாசங்கள் இடம்பெறுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இதனால் இந்தத்தளங்களைத் தடை செய்ய வேண்டும் என டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை பத்திரிகையாளர் வினய் ராஜ் பதிவு செய்திருந்தார். இந்த இணையதளங்களில் வெளியான ஆபாசப்படங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி, இந்துக் கடவுளர்கள் ஆகியோரை தரக்குறைவாக விமர்சிக்கும் பதிவுகள் ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சுதேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேஸ்புக்,மைக்ரோசாப்ட்,கூகுள்,யாகூ,யுடியூப் உள்ளிட்ட 21 இணையத் தளங்களில் அதிகளவில் ஆபாச பதிவுகள் இருப்பதால் இந்த இணையத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு இது சம்பந்தமாக ஜனவரி 13 ஆம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

18 வயதுக்குள் உள்ளவர்கள் கூட இந்த தளங்களை எந்தத் தடையுமின்றி பார்க்க வசதி இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ள நீதிபதி இந்த 21 இணையத்தளங்களுக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 292 (sale of obscene books etc),293 (sale of obscene objects to young person etc),120பி (criminal conspiracy) கீழ் வழக்குத் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பேஸ்புக்,யுடியூப் தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு"

Post a Comment