தலைப்புச் செய்தி

Sunday, December 25, 2011

முஸ்லிம்களை கைது செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் உதவியை நாடிய புலனாய்வு ஏஜன்சிகள்


மும்பை:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்(சிமி) உள்பட இஸ்லாமிய இயக்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஏ.டி.எஸ் உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித்தை நாடிய தகவல் வெளியாகியுள்ளது.
2006-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்
கைதாகி நிரபராதி என கண்டறிந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை மும்பை ஏ.டி.எஸ் கைது செய்ததும், புரோகித் அளித்த தகவல்களின் அடிப்படையிலாகும்.
இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானதை தொடர்ந்து ராணுவத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராணுவ இண்டலிஜன்ஸ் அதிகாரியான புரோகித்திற்கு ’இஸ்லாமிய தீவிரவாதத்தை’ குறித்து தகவல்களை அளித்ததற்கு நன்றி தெரிவித்து ஏ.டி.எஸ் அனுப்பிய கடிதங்களில் இருந்து இந்த உண்மை தெரியவந்துள்ளது.
மலேகான்-1, மலேகான்-2, அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பின்னணியில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ், புரோகித்தை உபயோகித்து புலனாய்வு ஏஜன்சிகளை திசைதிருப்பியது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
முஸ்லிம் அமைப்புகளை குறித்து போலியான தகவல்களை வழங்கிய புரோகித், முஸ்லிம் தீவிரவாதம்,சிமி ஆகியவற்றைக் குறித்து தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கும், போலீசாருக்கும் வகுப்புகளை நடத்தினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நாசிக் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த ஹிமான்ஷு ராய், அன்றைய ஏ.டி.எஸ் தலைவர் கே.பி.ரகுவன்ஷி ஆகியோர் 2005, 2006 வருடங்களில் புரோகித்திற்கு எழுதிய பாராட்டுக் கடிதங்கள்தாம் தற்பொழுது வெளியாகியுள்ளன.
2006-ஆம் ஆண்டு நவம்பர்13-ஆம் தேதி ஹிமான்ஷு ராய் 2006 நவம்பர் 13-ஆம் தேதி புரோகித்திற்கு எழுதிய கடிதத்தில்,’தாங்கள் போலீஸிற்கு அளித்த தகவல்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். புலனாய்வு விசாரணக்கு அவை உபயோகமானது’ என கூறியுள்ளார். இஸ்லாம், சிமி, ஐ.எஸ்.ஐ ஆகியவற்றைக் குறித்து நவம்பர் 11-ஆம் தேதி நடத்திய பணிமுகாம்(workshop) ஆய்விற்கு உதவியது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி ரகுவன்ஷி எழுதிய கடிதத்தில், ’நீங்கள் எழுதிய கடிதம் மிகவும் உபயோகமாக இருந்தது. எனது அதிகாரிகள் இதனைக் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்காலத்திலும் இம்மாதிரியான தகவல்களை அளிக்கவேண்டும்’ என கூறியுள்ளார்.
’புரோகித்தை போன்ற ராணுவ அதிகாரிகளின் அறிவும், திறமையும் படையினருக்கு மிகுந்த ஆதாயமாக அமையும் என லெஃப்.கர்னல் எஸ்.எஸ்.ராய்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், புரோகித்தின் ஹிந்துத்துவா தொடர்பை குறித்து அறியாததன் காரணமாக அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதாக ரகுவன்ஷியும், ஹிமான்ஷு ராயும் கூறுகின்றனர்.
2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பை தொடர்ந்து 2 வருட காலமாக ’முஸ்லிம் இயக்கங்களை’ குறித்து புரோகித் போலீசாருக்கு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.
2008 செப்டம்பர் மாதம் நடந்த இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே நடத்திய விசாரணையில் புரோகித் உள்பட சங்க்பரிவார தலைவர்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இரண்டு மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டனர். பின்னர் சில நாட்கள் கழித்து நடந்த மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கர்கரே கொல்லப்பட்டார்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம்களை கைது செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் உதவியை நாடிய புலனாய்வு ஏஜன்சிகள்"

Post a Comment