பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும், அரசியல் கட்சித்தலைவருமான இம்ரான்கான் சுனாமி நினைவு தினத்தையொட்டி மெகா பேரணி நடத்தினார்.
இதில் லட்சம் பேர் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் முக்கிய எதிர்க்கட்சியாக தக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான்கான் தொடங்கினார்.
இந்நிலையில் அந்நாட்டு தந்தையான முகமது அலி ஜின்னா பிறந்த தினம் மற்றும் இந்தியா, இந்தோனோஷியா உட்பட ஆசிய நாடுகளில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்குதல் நினைவு நாளையொட்டி அக்கட்சி சார்பில் கராச்சியில் மெகா பேரணி நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் குவாத் இ அசம் பூங்காவிலிருந்து தொடங்கிய பேரணியில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலர் கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்தனர்.
பேரணியை சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டே இம்ரான்கான் பார்வையிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பல்வேறு தலைவர்கள் இம்ரான்கானை வாழ்த்தி பேசினர்.
பேரணி முடிவில் இம்ரான்கான் பேசுகையில், ஊழலையும், அநீதியையும் ஒழித்து நீதியை நிலைநாட்டுவது தான் எனது கட்சியின் நோக்கம். கடந்த அக்டோபர் மாதம் நடத்திய பேரணியை காட்டிலும் இப்போது நடக்கும் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பாகிஸ்தான் அரசியலில் எதிர்காலத்தில் நமது கட்சி மகத்தான சாதனை படைக்கும் என்றார்.





0 comments: on "சுனாமி நினைவு தினத்தையொட்டி பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி"
Post a Comment