புது டெல்லி : உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் அன்னா மற்றும் அவரது குழுவினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் பிற கட்சிகள் கண்காணிக்கப்படுவதை போல் அன்னா மற்றும் அவரது குழுவின் நடவடிக்கையும் கண்காணிக்கப்படும் என்று கூறிய குரேஷி இது வரை அன்னா குழுவினர் நேரடியாக இந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லாததால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிராக வாக்களிக்க கோருவது அரசியல் சட்டப்படி தவறில்லை எனினும் வரம்பு மீறும் போது அது பிரச்னையாக கூடும் என்றும் குரேஷி கூறினார்.





0 comments: on "அன்னா குழுவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் : தேர்தல் கமிஷனர் குரேஷி"
Post a Comment