தலைப்புச் செய்தி

Monday, December 5, 2011

பாபர் மசூதி நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு


பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, வருகிற டிசம்பர் 6ம் திகதி வரை ரயில்களில் சிறு பொட்டலங்களை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.


இந்நிலையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் டிசம்பர் 6 ஆம் திகதி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்திலும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மேலும் மக்கள் பெருமளவில் கூடும் பகுதிகளில் பாதுகாப்பும், கண்காணிப்பும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்களில் 3 நாட்களுக்கு சிறு பொட்டலங்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாபர் மசூதி நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு"

Post a Comment