தலைப்புச் செய்தி

Friday, December 30, 2011

அன்னாவின் குழு நடத்தி வந்த வியாபாரம் படுத்து விட்டது"


புது டெல்லி : லோக்பால் மீதான விவாதத்தில் பேச வந்த ராஷ்டிரியா ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அன்னாவின் போராட்டம் ஒரு வியாபாரம் என்றும் அது படு தோல்வியடைந்து (ப்ளாப்பாகி) விட்டது என்றும் கடுமையாக அன்னாவை தாக்கினார்.

அன்னாவை கடுமையாக விமர்சிக்கும் லல்லு இன்று பாராளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசும் போது "மக்களின் பெயரால் அன்னா குழு நடத்தி வந்த வியாபாரம் படுத்து விட்டது" என்றும் மக்கள் அன்னாவை நிராகரித்து விட்டனர் என்றும் கூறினார்.

மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த அன்னா உடல் நிலை சரியில்லாததாலும் போதிய ஆதரவில்லாததாலும் தன் உண்ணாவிரதத்தை இரண்டு நாட்களோடு முடித்து கொண்டதும் ஜெயில் நிரப்பும் போராட்டத்தை நிறுத்தி கொண்டதும் குறிப்பிடத்தக்கது


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அன்னாவின் குழு நடத்தி வந்த வியாபாரம் படுத்து விட்டது""

Post a Comment