தலைப்புச் செய்தி

Wednesday, December 21, 2011

முல்லைப் பெரியாறு விவகாரம்: மலையாளிகளை பாதுகாக்க இணையதளம்


இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக மலையாளிகளை பாதுகாக்க புதிய இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு பிரச்சினையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பதின் நோக்கமாகhttp://supportkerala.org/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.


இதில் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொண்டால் தக்க நேரத்தில் பாதுகாப்பு உதவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து அந்த இணைதளத்தில் பதிவுசெய்ய வேண்டிய விடயங்களாக, தங்களுடைய பெயர், வயது, பாலினம், தொழில், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன், கேரளாவில் உள்ள உறவினர்கள், தமிழகத்தில் உள்ள உறவினர்கள், கேரளாவில் உள்ள நெருங்கிய நண்பர்கள், தமிழகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்கள் ஆகியோரின் முகவரிகளையும் பதிவு செய்ய வேண்டும்.


அதேபோல் கேரளாவில் உள்ள வீட்டு முகவரி, தொலைபேசி எண், குடும்பத்தினர் பெயர், முகவரி மற்றும் முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டியவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் முக்கியமாக பதிவு செய்யவேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முல்லைப் பெரியாறு விவகாரம்: மலையாளிகளை பாதுகாக்க இணையதளம்"

Post a Comment